புற்றுநோய்க்கான ஸ்டெம் செல்களை அழிக்க புதிய வழிமுறை!

மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவருவதும், உயிர்க்கொல்லி நோயுமாக காணப்படும் புற்றுநோயை குணப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளான ஸ்டெம் செல்களை அழிக்க புதிய வழிமுறை ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஆண்டிபயோட்டிக் மாத்திரைகளுடன் விட்டமின் C இனை இணைத்து பயன்படுத்துவதால் இது சாத்தியமாகின்றது. உதாரணமாக Doxycycline உடன் விட்டமின் C (Ascorbic Acid) இணைத்து பயன்படுத்த முடியும். இவ்வாறு பயன்படுத்துவது ஏனைய முறைகளை விடவும் 100 மடங்கு வினைத்திறனானது எனவும்…

Finger Print சென்சாருடன் மைக்ரோசொப்ட் அறிமுகம் செய்யும் நவீன கீபோர்ட்!

மைக்ரோசொப்ட் நிறுவனம் நவீன ரக கீபோர்ட் ஒன்றினை அறிமுகம் செய்வது தொடர்பில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதில் Finger Print சென்சார் இணைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். தவிர வயர் இணைத்தும், வயர்லெஸ் முறையிலும் இக் கீபோர்ட்டினை பயன்படுத்த முடியும். மேலும் இதனை Windows 10, macOS மற்றும் Android இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. 129.99 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இக் கீபோர்ட்டினை தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் மைக்ரோசொப்ட் நிறுவனம் இணைத்துள்ளது.

நூற்றுக்கணக்கான புதிய கிரகங்கள் நாசாவால் கண்டுபிடிப்பு!

அண்டவெளியில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத பல்லாயிரக்கணக்கான கோள்களும், நட்சத்திரங்களும் காணப்படுகின்றமை தெரிந்ததே. அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா புதிய கோள்கள் தொடர்பிலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் அடிப்படையில் தற்போது நூற்றுக்கணக்கான புதிய கோள்களை கண்டுபிடித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றுள் 10 வரையான கிரகங்கள் பூமியைப் போன்ற தோற்றத்தில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். கடந்த திங்கள் கிழமை வெளியிட்ட அறிவிப்பிலேயே இந்த தகவலை நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏறத்தாழ 219 வான்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றிலேயே…

கேட்கவே ஆச்சரியமாக இருக்கும்…. நமது காதுகளின் அற்புத உண்மைகள்….

செவிகளின் ஆரோக்கியத்திற்கு செவி மெழுகு சுரக்கவேண்டியது அவசியம். கேட்புத் திறனை சமப்படுத்துவதற்கு உட்செவி முக்கியமான அங்கமாகும். மனிதனின் செவி 24 ஆயிரம் நார்களால் ஆனது. சுமார் மூன்றேகால் கிலோ அழுத்தம் செவியை செவிடாக்குவதற்கு போதுமானது. நமது செவி லட்சக்கணக்கான ஒலிகளை வேறுபடுத்தி அறியும் திறன் கொண்டது. மனிதனின் செவி 1000 முதல் 50 ஆயிரம் அதிர்வெண் (ஹெர்ட்ஸ்) அலைவரிசை வரை கேட்கும் ஆற்றல் கொண்டது. நமது செவி கேட்பதை நிறுத்தாது. தூங்கும்போதும் சத்தங்களை கேட்கும். ஆனால், நமது…